Song 1113
மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததனா தான தத்ததனா தானதத்ததனா தானதனதான
Lyrics
மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவுமக்களுமா றாததுயர்கூர
மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவவைத்தவர்தா மேகமதிமாய
நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவுநெட்டளவாம் வாதையணுகாமுன்
நெக்குருகா ஞான முற்றுனதா ளோதிநித்தலும்வாழ் மாறுதருவாயே
நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேதனற்றவர்தா நாடவிடையேறி
நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவுநற்றுணைவா ஞாலமிகவாழப்
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாகபத்தியதா மாறுமுகநாளும்
பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாதபத்திசெய்வா னாடர்பெருமாளே.
