Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1088

குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனனந் தானந் தனதனனந் தானந்தனதனனந் தானந்தனதான

Lyrics

குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங்குலவியெழுங் கோலந்தனில்மாயக்

கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்குணவுயிர்கொண் டேகும்படிகாலன்

கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங்கதறமறந் தேனென்றகலாமுன்

கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன்கருணைமகிழ்ந் தோதுங்கலைதாராய்

நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்நினைவுமழிந் தோடும்படிவேலால்

நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின்நிலைதொழநின் றேமுன்பொருவீரா

பருதியுடன் சோமன் படியையிடந் தானும்பரவவிடந் தானுண்டெழுபாரும்

பயமறநின் றாடும் பரமருளங் கூரும்பழமறையன் றோதும்பெருமாளே.

All songs →