Song 1080
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தத்த தந்த தனதன தத்த தந்ததனதன தத்த தந்ததனதான
Lyrics
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்குறமகள் வைத்த நண்பைநினைவோனே
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்தமதசல முற்ற தந்தியிளையோனே
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்துஇசையறி வித்து வந்துஎனையாள்வாய்
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்துசமர்கள வெற்றி கொண்டபெருமாளே.
