Song 1071
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்தனத்த தந்தனம்தனதான
Lyrics
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்ப்ரபுத்த னங்கள்பண்பெணுநாணும்
பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்றமைத்த பெண்தனந்தனையாரத்
திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்திறத்தை யன்புடன்தெளியாதே
சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்திருக்கு மென்றொழிந்திடுவேனோ
தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்தரித்த குன்றநின்றடியோடுந்
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்தறித்த கண்டனெண்டிசையோருஞ்
சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்துணைச்செய் கின்றநின்பதமேவும்
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்துதிக்கு மும்பர்தம்பெருமாளே.
