Song 1061
முதலி யாக்கையு மிளமை நீத்தற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தாத்தன தனன தாத்தனதானா தானா தானா தானாதனதான
Lyrics
முதலி யாக்கையு மிளமை நீத்தறமூவா தாரா காவா தாராஎனஞாலம்
முறையி டாப்படு பறைக ளார்த்தெழமூடா வீடு டேகேள் கோகோஎனநோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிடமாதா மோதா வீழா வாழ்வேயெனமாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரைவாரா வானாள் போநாம் நீமீளெனவேணும்
புதல றாப்புன எயினர் கூக்குரல்போகா நாடார் பாரா வாராரசுரோடப்
பொருது தாக்கிய வயப ராக்ரமபூபா லாநீ பாபா லாதாதையுமோதுங்
குதலை வாய்க்குரு பரச டாக்ஷரகோடா ரூபா ரூபா பாணசதவேள்விக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்கோவே தேவே வேளே வானோர்பெருமாளே.
