Song 1053
அதல சேட னாராட அகில மேரு மீதாட
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பிருந்தாவன சாரங்கா
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
அதல சேட னாராட அகில மேரு மீதாடஅபின காளி தானாடஅவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராடஅருகு பூத வேதாளமவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராடமருவு வானு ளோராடமதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராடமயிலு மாடி நீயாடிவரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடுகருத லார்கள் மாசேனைபொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீதுகனக வேத கேர்டுதிஅலைமோதும்
உ ததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாதஉ வண மூர்தி மாமாயன்மருகோனே
உ தய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜனுளமு மாட வாழ்தேவர்பெருமாளே.
