Song 1041
மாதா வோடே மாமா னானோர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
Lyrics
மாதா வோடே மாமா னானோர்மாதோ டேமைத்துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடேமாயா மோகக்குடில்போடாப்
போதா நீரு டேபோய் மூழ்காவீழ்கா வேதைக்குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்போதார் பாதத்தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்வானோர் மேனிப்பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்வேலால் வேதித்திடும்வீரா
தீதார் தீயார் தீயு ட்முள்சேரா சேதித்திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
