Song 1038
ஊனே தானா யோயா நோயா
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
Lyrics
ஊனே தானா யோயா நோயாலுசா டூசற்குடில்பேணா
ஓதா மோதா வாதா காதேலோகா சாரத்துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்நானா வேதப்பொருளாலும்
நாடா வீடா யீடே றாதேநாயேன் மாயக்கடவேனோ
வானே காலே தீயே நீரேபாரே பாருக்குரியோனே
மாயா மானே கோனே மானார்வாழ்வே கோழிக்கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்தேசார் சாரற்கிரியோனே
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
