Song 1036
தீயும் பவனமு நீருந் தரணியும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானந் தனதன தானந் தனதனதானந் தனதனதனதான
Lyrics
தீயும் பவனமு நீருந் தரணியும்வானுஞ் செறிதருபசுபாசத்
தேகந் தனைநிலை யேயொன் றிருவினைதீருந் திறல்வினையறியாதே
ஓயும் படியறு நூறும் பதினுறழ்நூறும் பதினிருபதுநூறும்
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநலயோகம் புரிவதுகிடையாதோ
வேயுங் கணியும்வி ளாவும் படுபுனமேவுஞ் சிறுமிதன்மணவாளா
மீனம் படுகட லேழுந் தழல்படவேதங் கதறியவொருநாலு
வாயுங் குலகிரிபாலுந் தளைபடமாகந் தரமதில்மறைசூரன்
மார்புந் துணையுறு தோளுந் துணிபடவாள்கொண் டமர்செய்தபெருமாளே.
