Song 1025
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பீம்பளாஸ்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
சீதமலம் வெப்பு வாதமிகு பித்தமானபிணி சுற்றியுடலுடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்கதீதுவிளை விக்கவருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்கசாகரம தற்குளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்ததாள்தர நினைத்துவரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்றுமாமயிலில் நித்தம்வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றிமாலுழலு மற்றமறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்தநாதவிறல் மிக்கஇகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டிமீளவிடு வித்தபெருமாளே.
