Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1017

மழையளக பார முங்கு லைந்து

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தான தந்த தந்ததனதனன தான தந்த தந்ததனதனன தான தந்த தந்ததனதான

Lyrics

மழையளக பார முங்கு லைந்துவரிபரவு நீல முஞ்சி வந்துமதிமுகமும் வேர்வு வந்த ரும்பஅணைமீதே

மகுடதன பார முங்கு லுங்கமணிகலைக ளேற வுந்தி ரைந்துவசமழிய வேபு ணர்ந்த ணைந்துமகிழ்வாகிக்

குழையஇத ழூற லுண்ட ழுந்திகுருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்சகுமுதபதி போக பொங்கு கங்கைகுதிபாயக்

குழியிலிழி யாவி தங்க ளொங்குமதனகலை யாக மங்கள் விஞ்சிகுமரியர்க ளோடு ழன்று நைந்துவிடலாமோ

எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்சஇரணகள மாக அன்று சென்றுஎழுசிகர மாநி லங்கு லுங்கவிசையூடே

எழுகடலு மேரு வுங்க லங்கவிழிபடர்வு தோகை கொண்ட துங்கஇயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்தவடிவேலா

பொழுதளவு நீடு குன்று சென்றுகுறவர்மகள் காலி னும்ப ணிந்துபுளிஞரறி யாம லுந்தி ரிந்துபுனமீதே

புதியமட லேற வுந்து ணிந்தஅரியபரிதாப முந்த ணிந்துபுளகிதப யோத ரம்பு ணர்ந்தபெருமாளே.

All songs →