Song 1000
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஸிம்மேந்திர மத்யமம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ரத்ருவம் - 2 களை (22)(எடுப்பு - /3/3/3 0)தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தனதானன தந்தன தாத்தனதனதான
Lyrics
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவிலோசன அம்புக ளாற்செயல்தடுமாறி
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிருவேளைபு குந்தப ராக்ரமமதுபாடி
நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதினாலுல கங்களு மேத்தியஇருதாளில்
நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரமநாடஅ ருந்தவம் வாய்ப்பதுமொருநாளே
ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொராயிர வெம்பகு வாய்ப்பணிகயிறாக
ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தருளாயனு மன்றெயில் தீப்படஅதிபார
வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றியவாழ்வென வஞ்சக ராக்ஷதர்குலமாள
வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்வானுல குங்குடி யேற்றியபெருமாளே.
